
ரவாங், நவம்பர்-3,
2025 Bridgestone ASEAN அமெச்சூர் பொது கோல்ஃப் போட்டி, 12 சுற்றுகளைக் கொண்ட அதன் பரபரப்பான பருவத்தை சிலாங்கூர், ரவாங்கில் உள்ள Templer Park Country Club-பில் அதிரடி இறுதிப் போட்டியின் மூலம் நிறைவுச் செய்துள்ளது.
இவ்வட்டாரத்தைச் சேர்ந்த முன்னணி அமெச்சூர் கோல்ஃப் விளையாட்டாளர்களை, இப்போட்டி ஒன்றிணைத்தது.
Templer Park-கில் தகுதிச் சுற்றில் வெற்றிப் பெற்றதை போலவே, இம்முறையும் Ong Pok Wen மீண்டும் தனது திறமையை நிரூபித்து Nett Champion பட்டத்தை வென்றார்.
அதே சமயம், IOI Palm Villa போட்டியில் பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக, Imran Marzuki வலுவான 77 மதிப்பெண்களுடன் Gross Champion பட்டத்தைக் கைப்பற்றினார்.
9-ஆவது ஆண்டை கடந்துள்ள இப்போட்டி, ஆசியா முழுவதும் விரிவடைந்து வருகிறது.
இந்நிலையில் 2026-ல் நடைபெறும் 10-ஆம் ஆண்டு போட்டி இதை விட சிறப்பாக இருக்குமென, Prestige Golf Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாசுதேவன் கிருஷ்ணன் உத்தரவாதம் அளித்தார்.
இப்போட்டி ஆண்டுக்கு ஆண்டுக்கு தரத்திலும் எண்ணிக்கையிலும் பிரபலமடைந்து வருவது குறித்து Bridgestone உதவித் தலைவர் Yuichi Wada மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இந்த நிறைவு விழாவில் Prestige Golf நிறுவனத்தின் 3-ஆம் நிறைவாண்டும் கொண்டாடப்பட்டது; அதில் Bridgestone Sports மற்றும் SOKIO Corporation போன்ற முக்கிய பங்குதாரர்களும் கலந்து கொண்டனர்.
தென்கிழக்காசியாவில் கோல்ஃப் வளர்ச்சிக்கு இது ஒரு மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.



