
ஜெய்ப்பூர், நவம்பர்-4 – இந்தியாவின் ராஜஸ்தானில் ட்ரக் லாரி மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
ட்ரக் லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று வாகனங்களை மோதும் குலைநடுங்க வைக்கும் காட்சிகள் அருகிலுள்ள CCTV-யில் பதிவாகியுள்ளன.
லாரி சுமார் 300 மீட்டர் தூரம் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் மோதியபடி பயங்கரமாகச் சென்றது.
கடைசியில், நிறுத்தியிருந்த ஒரு டிரெய்லருடன் மோதியே அது நின்றது.
ட்ரக் ஓட்டுநர் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸார் கூறினர்.
அவர் தற்போது காவலில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்திற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் வேளை, அதிகாரிகள் விபத்தின் காரணங்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.



