Latestமலேசியா

4 யூனீட்டுகளுக்கு RM113 மில்லியன் – Public Mutual இன் புதிய அறிவிப்பு

 

கோலாலம்பூர், நவம்பர் 5 – மலேசியாவின் மிகப்பெரிய தனியார் யூனிட் அமானா மேலாண்மை நிறுவனம் மற்றும் Public Bank பெர்ஹாட் நிறுவனத்தின் துணை நிறுவனமான Public Mutual Bhd, நான்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிகளின் யூனிட் வைத்திருப்போருக்கு மொத்தம் 113 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அந்த நிதிகளில் Public Islamic Bond Fund ஆண்டுதோறும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 5.00 சென் வழங்குகிறது. அதேபோல், Public e-Ataraxia Mixed Asset Fund நிதி ஒவ்வொரு யூனிட்டிற்கும் 1.00 சென் கூடுதல் வழங்கலாக வழங்குகிறது.

இதனுடன், Public Islamic Dividend Fund ஆறு மாதத்திற்கு ஒருமுறை யூனிட்டிற்கு 0.50 சென் வழங்க, PB Asia Real Estate Income Fund ஆண்டுதோறும் யூனிட்டிற்கு 0.40 சென் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது Public Mutual நிறுவனம் 180-க்கும் மேற்பட்ட யூனிட் அமானா நிதிகளையும், ஒன்பது தனியார் ஓய்வூதிய திட்ட (PRS) நிதிகளையும் நிர்வகித்து வருகிறது.

இதன் மூலம், மலேசியாவின் நிதி மேலாண்மை துறையில் முன்னணியில் திகழும் நிறுவனமாக தன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!