45 ஆண்டுகளுக்கு பிறகு ‘Tom Cruise’க்கு ஒஸ்கார் அங்கீகாரம்

அமெரிக்கா, நவம்பர் 18 – கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்திற்குப் பிறகு, ஹாலிவுட் நட்சத்திரம் ‘Tom Cruise’ தனது முதல் ‘கௌரவ ஒஸ்கார்’ (Oscar) விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
63 வயது மதிக்கத்தக்க க்ரூஸ், Governor Awards 2025 விழாவில் இந்த மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றார். டாலி பார்டன் (Dolly Parton), டெப்பி ஆல்லன் (Debbie Allen) மற்றும் விண் தோமஸ் (Wynn Thomas) ஆகியோரும் அவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதினை பெற்றுக்கொள்ள ‘Cruise’ மேடையேறிய பொழுது, வருகை புரிந்திருந்த அனைத்து முக்கிய பிரமுகர்களும் அவரை பலத்த கைதட்டல்கள் எழுப்பி வரவேற்றனர்.
திரைப்படம் என்பது தன்னுடைய வேலை மட்டுமல்ல, மாறாக அதுவேதான் நான், என்று அவர் தனதுரையில் கூறினார். சினிமா தன்னை இந்த உலகிற்கு அறியச்செய்தது என்றும் அது மக்களை ஒன்றாக இணைக்கும் மாபெரும் கலை என்றும் அவர் வலியுறுத்தினார்.
க்ரூஸ் இதற்கு முன்னதாக, Born on the Fourth of July, Jerry Maguire, Magnolia, மற்றும் Top Gun: Maverick ஆகிய படங்களுக்கு நான்கு முறை ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகாடமி, சினிமா மற்றும் ஆக்ஷன் துறையில் க்ரூஸின் தொடர்ந்த பங்களிப்பை நினைவுகூர்ந்து இவ்வங்கீகாரத்தை அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.



