
கோலாலம்பூர், நவ 19 – அண்மையில் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தின் 27 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆசிரியை திருமதி ஈஸ்வரி நாகலிங்கம் கல்வித்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
குடும்ப வறுமை சூழ்நிலையையும் பொருட்படுத்தாது கல்வி ஒன்றே இலக்காக கொண்டு, கடின உழைப்பால் அவர் இந்த வெற்றியை அடைந்துள்ளார்.
ஒட்டு மொத்த PNGK 3.95 சிறந்த அடைவுநிலையை பதிவு செய்துள்ள 32 வயதுடைய ஈஸ்வரி நாகலிங்கம் , சொகமானாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு அறிவியல் பாடத்திற்கான நனி சிறந்த ஆசிரியராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
பேரா பெருவாஸைச் சேர்ந்த ஈஸ்வரி நாகலிங்கம் கடந்த ஏழு ஆண்டு காலமாக ஆயர் தாவாரில் வாசித்து வருகிறார் என்பதோடு தற்போது அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
திருமணமாகிவிட்ட போதிலும் , குடும்பம், ஆசிரியர் பணி ஆகியவற்றுக்கு மத்தியில் தொடர்ந்து கல்வியில் முழு ஈடுபாடு கொண்டு தற்போது முதுகலை பட்டம் பெற்றுள்ள ஈஸ்வரி நாகலிங்கம் மேலும் பல வெற்றிகளை பெறவேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.



