
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மைக்ரோசிப் அடிப்படையிலான டிஜிட்டல் பதிவு முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சு ஆய்வு செய்து வருகிறது.
இம்முறையின் கீழ், உரிமையாளரின் தகவல், தடுப்பூசி, உரிமம், மற்றும் கண்காணிப்பு விவரங்கள் பதிவுச் செய்யப்படும்.
கால்நடை சேவை துறை இந்த முயற்சியை முன்னெடுப்பதாக, துணையமைச்சர் டத்தோ Aiman Athirah Sabu மேலவையில் கூறினார்.
இத்திட்டம், தெருநாய் பிரச்னையைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பான நாய் வளர்ப்பை ஊக்குவிக்கவும் உதவும் என்றார் அவர்.
இவ்வேளையில், தெருநாய்கள் குறித்து கடந்தாண்டு 37,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த நிலையில், 66,000க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன.
அவற்றில், 19,000க்கும் மேற்பட்டவை உரியவர்களால் மீட்டு செல்லப்பட்டன அல்லது தத்தெடுக்கப்பட்டன என துணையமைச்சர் சொன்னார்.



