
புத்ராஜெயா, டிசம்பர்-8 – KBS எனப்படும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாட்டிலான பல்வேறு தன்னார்வத் திட்டங்களில் இவ்வாண்டு முழுவதும் 10,420 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இத்திட்டங்களில் MYCorps Borneo 2025, ASEAN Youth Volunteer (AYV), Sukarelawan Anak Malaysia (SATRIA), Furr Ever மற்றும் DENGAR Rakan Muda போன்றவை அடங்கும்.
இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பது, சமூகச் சேவையிலும் சமூக வளர்ச்சியிலும் மலேசிய இளைஞர்களின் உயர் கடப்பாட்டை காட்டுவதாக, துணையமைச்சர் Adam Adli Abdul Halim கூறினார்.
அரசாங்கத்தின் பல தன்னார்வத் திட்டங்கள் இளைஞர்களை சமூக சேவையில் ஈடுபடுத்த உதவுகின்றன.
இத்தகைய முயற்சிகள் சமூக ஒற்றுமையையும் உதவும் மனப்பாங்கையும் வளர்க்கின்றன என்றார் அவர்.
புத்ராஜெயாவில் HKBM எனப்படும் மலேசிய இளைஞர் தன்னார்வலர்கள் தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.
அந்நிகழ்வில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ Dr .கே. நகுலேந்திரன் உள்ளிட்ட 5,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த HKBM நிகழ்வு Rancakkan MADANI மற்றும் அனைத்துலகத் தன்னார்வலர் தினம் ஆகியவற்றின் இணைப்பாக, “ ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியம்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது.



