
டெக்சஸ், டிசம்பர்-10 – TasteAtlas வெளியிட்டுள்ள உலகின் மிகச் சிறந்த 100 உணவுகள் பட்டியலில், இந்திய உணவுகள் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
பல்வேறு சுவைகள் மற்றும் தனித்துவமான மசாலா கலவைகளால் உலகளவில் பிரபலமான இந்திய உணவுகள், 5-க்கு 4.43 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் நான், ஹைதராபாத் பிரியாணி, மசாலா தோசை, பரோட்டா போன்ற உணவுகள் உலகின் சிறந்த உணவுப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.
இந்திய உணவுகளிலேயே ஆக அதிகமாக பட்டர் கார்லிக் நான் 4.7 புள்ளிகளைப் பெற்ற வேளை, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரோட்டாக்கள் (நம்மூரில் ரொட்டி சானாய்) 4.6 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
இப்படி, பாரம்பரியத்தையும் சுவையையும் இணைத்து, இந்திய உணவுகள் உலகின் சிறந்த 15 உணவுகளில் ஒன்றாக வலம் வருகின்றன.
பீட்சா உள்ளிட்ட இத்தாலிய உணவுகள் 4.64 புள்ளிகளைப் பெற்று உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.



