
சுவிட்சர்லாந்து, டிசம்பர் 13 – மிஸ் ஸ்விட்சர்லாந்து (Miss Switzerland) முன்னாள் இறுதிப்போட்டியாளரான 38 வயதான Kristina Joksimovic, தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாக சுவிட்சர்லாந்து போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2024-ல் அவர்களின் இல்லத்திலேயே நடந்ததெனவும் குறிப்பிடப்பட்டது.
43 வயதான அவரின் கணவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர் அவரின் உடலை துண்டித்து அழிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது சந்தேக நபர் தடுப்புக்காவலில் உள்ள நிலையில் விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
கிரிஸ்டினா 2007-ல் மிஸ் நார்த்-வெஸ்ட் ஸ்விட்சர்லாந்து பட்டத்தை வென்றவர் என்பதும் மிஸ் ஸ்விட்சர்லாந்து இறுதிப்போட்டியாளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



