மலேசியா
சிரம்பான் ஜாலான் ராசா துப்பாக்கிச் சூடு: குண்டர் கும்பல் மோதலாக இருக்குமென போலீஸ் சந்தேகம்

சிரம்பான், டிசம்பர்-13, சிரம்பான், ஜாலான் ராசா சாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு, குண்டர் கும்பல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.
டிசம்பர் 10-ஆம் தேதி, போர்டிக்சன் டோல் சாவடி அருகே நடந்த தாக்குதலில், ஒருவரின் மெய்க்காவலர் உயிரிழந்தார்; அவரது முதலாளி கடுமையாக காயமடைந்தார்.
விசாரணையில், முதலாளிக்கு 15 குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்ததால், குண்டர் கும்பல் தொடர்பு இருக்கலாம் என நெகிரி செம்பிலான் போலீஸ் கருதுகிறது.
குறிப்பாக பழிவாங்கல் அல்லது கும்பல் மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இரு சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டு, ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.



