Latestமலேசியா

பாரம்பரியம் பொது மக்களின் சொத்து, மேல்தட்டு வர்கத்தினருடையது அல்ல: பிரதமர் அன்வார் பேச்சு

நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் அனைத்தும் பொது மக்களின் சொத்தாகும்; மேல்தட்டு வர்கத்தினருடையது அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

எனவே, Seri Negara, Carcosa மற்றும் சுல்தான் அப்துல் ஹமிட் கட்டட வளாகம் உள்ளிட்ட பாரம்பரிய இடங்களை புனரமைப்பு செய்வதானது, பொது மக்களின் மரியாதை மற்றும் தேசிய அடையாளத்தை உருவாக்கும் முக்கிய முயற்சி என அவர் வருணித்தார்.

இவை பொது மக்களி அடையாளங்களாகும்; மேல்தட்டு வர்க்கம் அல்லது காலனித்துவ அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என அவர் சொன்னார்.

“பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் இவற்றை பார்வையிடுவதும், கற்று, பெருமை கொள்வதுவும் முக்கியம்” என அன்வார் வலியுறுத்தினார்.

தலைநகரில் இன்று Seni Negara புனரமைப்பு நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர், Khazanah Nasional Bhd நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபெய்சால் வான் சாஹிர் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.

Seri Negara, Carcosa மற்றும் சுல்தான் அப்துல் சமாட் கட்டட வளாகத்தில் உள்ள 6 கட்டடத் தொகுதிகளைப் பாதுகாப்பது, Khazanah Nasional Bhd நிறுவனத்தால் RM600 மில்லியன் முதலீட்டில் செயல்படுத்தப்படும் Warisan KL திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!