
சிட்னி, டிசம்பர்-16 – ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Bondi கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது, கொலையாளியின் மீது பாய்ந்து சுடும் ஆயுதத்தை பறித்து ‘ஹீரோவான’ ஆடவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
43 வயது முஸ்லீம் தந்தை அஹ்மத் அல் அஹ்மத் (Ahmed Al Ahmed), துப்பாக்கி ஏந்தியவனை தைரியமாக எதிர்த்து ஆயுதத்தை பறித்தார்.
அப்போது மற்றொரு தாக்குதல்காரன் அவரை 2 முறை சுட்டதால் கையில் காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய துப்பாக்கிச் சூடாகும்; மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், _“உண்மையான ஹீரோ”_ என ஆஸ்திரேலியப் பிரதமர் முதற்கொண்டு அனைவரும் அஹ்மெட்டைப் பாராட்டி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூட அவரை “மிகுந்த தைரியசாலி” என புகழ்ந்தார்.
அவருக்கான பொது மக்களின் நன்கொடையும் ஒரே நாளில் 1.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரைக் கடந்துள்ளது.
கோடீஸ்வரர்களும் நிதி நிதி வழங்கி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வெளியே மக்கள் மலர்கள் வைத்து மரியாதையும் செலுத்தினர்.
தன்னுயிரைப் பணயம் வைத்த அஹ்மெட்டின் தைரியம் மதம், இனம், நாடு என எல்லாவற்றையும் தாண்டி மனிதநேயத்தின் சின்னமாக மாறியுள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



