
கோலாலம்பூர், டிச 22 – தங்களுக்கிடையிலான பகைமையை
முடிவுக்கு கொண்டுவந்து , கனரக ஆயுதங்களை மீட்டுக்கொள்வதுடன், நிலவெடி பதிப்பதை நிறுத்திக்கொண்டு கோலாலம்பூரில் காணப்பட்ட அமைதி உடன்பாட்டை முழுமையாக அமல்படுத்தும்படி கம்போடியாவையும் தாய்லாந்தையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவெடியை அகற்றுவதுடன் எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வுகாண்பதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்தும்படி அமெரிக்கா வெளியுறவுத்துறையின் துணைபேச்சாளர் தாமஸ் டோமி பிகோட் ( Thomas Tommy Pigot ) வலியுறுத்தினார்.
நெருக்கடியை முடிவுக் கொண்டு வருவதற்கான தங்களது முழுமையான கடப்பாட்டை மதிப்பதற்காக கம்போடியா மற்றும் தாய்லாந்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு திங்கட்கிழமை ஆசியான் தலைவர்கள் கூடவிருப்பதை தாங்கள் வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்தவிருக்கும் சிறப்புக் கூட்டத்திற்கு மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் தலைமையேற்பார்.



