
சுங்கை பூலோ, டிசம்பர்-29 – 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திரா காந்தி தனது மகளுடன் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்திரா காந்தியையும் மகள் பிரசன்னா தீக்ஷாவையும் மீண்டும் இணைக்க, சிலாங்கூர் சுங்கை பூலோ பாஸ் தலைவர் Zaharudin Muhammad, தன்னார்வ அடிப்படையில் உதவ முன்வந்துள்ளார்.
சட்ட மற்றும் மத விவகாரங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன; இப்போது மனிதாபிமான அடிப்படையில் தாய்–மகள் மீண்டும் சேர வேண்டும் என்றார் அவர்.
தாயிடமிருந்து பிள்ளையைப் பிரிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்காது; எனவே, தனது தனிப்பட்ட முயற்சியாக இந்திரா காந்தியையும் அவரின் மகளையும் மீண்டும் சந்திக்க வைப்பதே தற்போதைக்கு தமது முன்னுரிமை என, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் Zaharudin சொன்னார்.
மத்தியஸ்தம் செய்து வைக்க தாம் தயாராக இருப்பதால், பிரசன்னாவோ அவரின் தந்தை Ridzuan Abdullah-வோ தாரளாமாகத் தம்மை தொடர்புக் கொள்ளலாம் என்றார் அவர்.
பிரசன்னா அல்லது அவரது தந்தை இருக்குமிடம் தெரிந்தோரும் தொடர்கொண்டு தகவல் கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தனிப்பட்ட மனிதரின் முயற்சி என்றாலும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்–மகள் மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையை இது உருவாக்கியுள்ளது.



