
சான் ஃபிரான்சிஸ்கோ, செப்டம்பர்-10 – AI வருகைக்கு மத்தியில் Apple நிறுவனம் தனது iPhone 17 விவேகக் கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
iPhone வரிசையிலேயே மிகக் குறைந்த தடிமன் அதாவது வெறும் 5.6 மில்லி மீட்டர் அளவை மட்டுமே கொண்டது தான் இந்த iPhone 17 Air.
999 டாலர் விலையில் வரும் இந்த மாடல், ஆப்பிளின் சக்திவாய்ந்த புதிய A19 Pro சிப் மூலம் இயங்குகிறது.
இதில் முழுநாள் பேட்டரி வசதி மற்றும் அதிகபட்சம் 40 மணி நேர வீடியோ playback வசதியும் உண்டு.
புதிதாக மேம்படுத்தப்பட்ட AI அம்சங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், உயர்தர மற்றும் விலை உயர்ந்த iPhone 17 Pro மாடலையும் Apple வெளியிட்டுள்ளது.