
செந்தோசா, செப்டம்பர்-10 – DJ இசைத் துறையில் பிரகாசிக்கும் இளைஞர்களுக்காக, Beat Thalaivan : ஒரே மேடை ஒரே வெற்றியாளர் எனும் தேசிய அளவிலான DJ போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Real Jockeys, Trinity Solutions, செந்தோசா சட்டமன்ற உறுப்பினரின் சேவை மையம், சிலாங்கூர் செந்தோசா நல்வாழ்வு சங்கம், Agenda Suria Communications ஆகியவை இப்போட்டியின் இணை ஏற்பாட்டாளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் செயல்படுகின்றன.
இசை மற்றும் படைப்பாற்றல் கலை மூலம் இளைஞர்களை வலுப்படுத்தவும் DJ-களின் திறமைகளை தேசிய அளவில் கொண்டுச் செல்லவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாக, சிலாங்கூர், ஸ்ரீ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
அதோடு இளைஞர்கள் நல்ல முறையில் சம்பாரிக்கவும் இது துணைப் புரியுமென, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
இவ்வேளையில் திறமை வாய்ந்த DJ கலைஞர்களுக்கு பெரும்பாலும் சரியான மேடைக் கிடைப்பதில்லை என்ற குறையை இந்நிகழ்ச்சிப் போக்குவதோடு வர்த்தக ரீதீயாக முழுமூச்சுடன் இயங்கினால் DJ தொழில் நல்ல வருமானத்தைக் கொண்டு வரமுடியும்.
கவர்ச்சிகரமான பரிசுகள், பங்கேற்பு சான்றிதழ்கள், 12,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பரிசுப் பணம் போட்டியாளர்களுக்கு காத்திருக்கின்றன.
ஒருவர் மட்டுமே Beat Thalaivan-னாக மகுடம் சூடுவார்.
பங்கேற்க ஆர்வமுள்ளோர் இன்று தொடங்கி விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 23-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
பூர்வாங்கச் சுற்று செப்டம்பர் 26-ஆம் தேதியும், அரையிறுதிச் சுற்று அக்டோபர் 5-ஆம் தேதியும் நடைபெறும்.
உச்சக் கட்ட நிகழ்வான தேசிய அளவிலான இறுதிப் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி நடத்தப்படும்.
மேல் விவரங்களுக்குத் கீழ்காணும் எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
012-5803605 / 017-3149462