
கெய்ரோ, நவம்பர்-8 – 2022-ஆம் ஆண்டு கெய்ரோவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட EgyptAir விமானத்தில் பயணித்த பிரிட்டன் நாட்டு ஆடவர் ஒருவர், இருக்கை பாக்கெட்டில் மறைந்திருந்த ஊசியால் குத்தப்பட்டதாக கூறி, HIV அச்சத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
HIV மற்றும் Hepatitis போன்ற கிருமிகள் உடலில் பரவியிருக்கலாம் என்ற பயத்தில், அவர் பல மாதங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்குச் சென்றார்.
பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக இருந்தாலும், மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்காக அவர் தற்போது 5 மில்லியன் டாலர் இழப்பீடு கோருகிறார்.
குறிப்பாக தாங்க முடியாத மனஉளைச்சலுக்குத் தாம் ஆளானதாக James Haggerty தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டார்.
எனினும் அது குறித்து EgyptAir இதுவரை பொது வெளியில் கருத்துரைக்கவில்லை.
என்றாலும், இச்சம்பவம் விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுத்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.



