
செப்பாங், நவம்பர்-16 – KLIA நோக்கிச் செல்லும் Elite நெடுஞ்சாலையில் நேற்றிரவு இரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரேய்லர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அலுமினியம் அல்லது Zinc Oxide ஏற்றியிருந்த லாரி, இரவு 9 மணிக்கு மேல் தீப்பிடித்தது.
தகவல் கிடைத்து 3 நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு – மீட்புப் படையினர் சம்பவ இடம் விரைந்தபோது, லாரி 80% எரிந்துபோயிருந்தது.
இரசாயனம் என்பதால், தீயணைப்பு வீரர்கள் சற்று கவனமாகவே தீயை அணைக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக தீப்பொறி ஏற்படாமலிருக்க, அதிகாரிகள் கனரக இயந்திரங்களை தவிர்த்து, லாரியை சாலையோரம் தள்ளினர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் போக்குவரத்துக்கு பெரும் தடங்கலை ஏற்படுத்தியது



