Latestமலேசியா

FIFA நடவடிக்கை உற்சாகத்தைக் குறைக்கவில்லை; லாவோஸை 3-0 என வீழ்த்திய ஹரிமாவ் மலாயா

வியன்தியேன், அக்டோபர்-10,

ஆவண மோசடி தொடர்பில் அனைத்துலகக் கால்பந்து சம்மேளனத்தால் 7 வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும், ஹரிமாவ் மலாயா உற்சாகம் குறையாதவாறு லாவோசை 3-0 என தோற்கடித்துள்ளது.

அந்த 2027 AFC ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் F பிரிவு ஆட்டம், நேற்றிரவு லாவோஸ் தலைநகர் Vientinane-னில் நடைபெற்றது.

Arif Aiman Hanapi, கேப்டன் Dion Cools, Faisal Halim ஆகிய மூவரும் மலேசியாவின் கோல்களைப் புகுத்தினர்.

இது இப்போட்டியில் மலேசியாவின் மூன்றாவது தொடர் வெற்றியாகும்.

7 பாரம்பரிய வீரர்கள் இன்றி களத்தில் இறங்கினாலும், ஆட்டம் தொடங்கியது முதலே எதிரணியை நோக்கி தாக்குதல் தொடுத்ததன் விளைவாக, ஹரிமாவ் மலாயா வசதியான கோல் வித்தியாசத்துடன் வெற்றிப் பெற்றுள்ளது.

லாவோஸ் அணியுடனான மறு ஆட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறும்.

தகுதிச் சுற்றின் முதல் 3 ஆட்டங்களை முடித்து 9 புள்ளிகளுடன் மலேசியா முதலித்திலும், 6 புள்ளிகளுடன் வியட்நாம் இரண்டாமிடத்திலும், 3 புள்ளிகளுடன் லாவோஸ் மூன்றாமிடத்திலும் உள்ளன.

ஒரு புள்ளியும் பெறாமல் நேப்பாளம் கடைசி இடத்தில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!