
ஜெய்ப்பூர், டிசம்பர்-10 – 65 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய இராணுவக் குழு, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MFFR எனப்படும் Mahajan Field Firing Range படைத் தளத்தில், HARIMAUSHAKTI கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
அங்கு நடைபெறும் முதல் HARIMAUSHAKTI பயிற்சி இதுவாகும்.
இந்த இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பில் இது ஐந்தாம் பட்டாளமாகும்.
டிசம்பர் 5 முதல் 18 வரை நடைபெறும் இந்தப் பயிற்சி இரு இராணுவங்களின் இணக்கத்தையும், கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த பதிலளிப்பையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.

திறப்புவிழா டிசம்பர் 5 அன்று MFFR பயிற்சித் தளத்தில் நடைபெற்றது.
இந்த இரு வார காலத்தில், சுற்றிவளைப்பு மற்றும் தேடல் நடவடிக்கைகள், தளங்களைப் பாதுகாத்தல், காயமடைந்தவர்களை வெளியேற்றுதல், ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்ற தந்திர நடவடிக்கைகளில் இரு தரப்பும் திறன்களை மேம்படுத்தவுள்ளன.
இரு நாடுகளின் இராணுவ நட்புறவை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இது அமைவதாக, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.



