
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16-இரம்மியமானச் சூழலுக்கும் ருசியான உணவுகளுக்கும் பெயர்ப் பெற்ற India Gate உணவகத்தின் 12-ஆவது கிளை, பெட்டாலிங் ஜெயா, 1 Utama Mall பேரங்காடியில் இன்று பிரமாண்டமாக திறப்பு விழா கண்டது.
India Gate நிர்வாக இயக்குநர் சரவணன் சுப்ரமணிம், அவரின் தாயார் மற்றும் சிறப்பு வருகை மேற்கொண்ட ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் மூவரும் இணைந்து ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தனர்.
சிறப்பு அங்கமாக பிரமுகர்களுடன் கேக்கும் வெட்டப்பட்டது.
திறப்பு விழாவை ஒட்டி முதலில் வந்த 1,000 பேருக்கு இன்று இலவசமாக பிரியாணிப் பொட்டலங்களும், 5% பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் அமரக்கூடிய அளவுக்கான இந்த உணவகம், வழக்கமான உணவு வகைகளை நிலைநிறுத்தியுள்ளது.
என்றாலும், புதிய அறிமுகமாக வாடிக்கையாளர்களுக்கு banana leaf on plate மற்றும், nort Indian talli set ஆகியவையும் மெனுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மற்ற இனத்தாருக்கும் இந்திய உணவுகளின் ருசியை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே, இது போல் வணிக வளாகங்களுக்குள் கிளையைத் திறப்பதாக சரவணன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.



