‘Influenza’ பரிசோதனை ‘கிட்டை’ வாங்குவதற்கு முன்பு பதிவு நிலையைச் சரிபார்க்கவும் – மருத்துவ சாதன அதிகாரசபை (MDA)

புத்ராஜெயா, அக்டோபர் 31 –
மக்கள் ‘Influenza’ பரிசோதனை ‘கிட்டுகளை’ வாங்குவதற்கு முன்பு, அவை மருத்துவ சாதன அதிகாரசபையான MDAவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு கிட்டும் அதன் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த MDA-வில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் பதிவு நிலையை மக்கள் MDA வலைத்தளத்தில் சரிப்பார்க்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
சமீப காலமாக அதிகம் பரவி வரும் Influenza தொற்றை காரணமாக கொண்டு, சிலர் பதிவு செய்யப்படாத பரிசோதனை கிட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் MDA-வில் பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்களிடம் மட்டுமே கிட்டுகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
பதிவு செய்யப்படாத கிட்டுகளின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனை மீறுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என MDA எச்சரித்தது.



