சுவீடன், செப்டம்பர் -29 – IVF செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான இதயக் குறைபாடுகள் இருமடங்கு அதிகமாக இருப்பதாக, சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுவே இரட்டையாக பிறந்தால் அந்த ஆபத்து மேலும் அதிகரிக்கின்றது.
அக்கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட Heart இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளானது, மருத்துவர்களுக்கு நிலைமைகளை விரைவாகக் கண்டறிய உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பிறவி இதயக் குறைபாடுகளானது, குழந்தைகள் மிகவும் இளமையாக இருக்கும் போதே சிறப்பு அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மிகவும் தீவிரமானவை.
எனவே எந்த குழந்தைகளுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதை அறிந்து கொள்வதன் மூலம், இதயக் குறைபாடுகளை கூடிய விரைவில் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிச் செய்ய வாய்ப்பேற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
மேற்கண்ட ஆய்வு 77 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.