Latestமலேசியா

Jagat Multiverse: ‘Macai’ மற்றும் ‘Blues’ வெளியீடு – மலேசிய தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம்

கோலாலம்பூர், நவம்பர்-10,

Skyzen Studios தயாரிப்பில், Sun-J Perumal இயக்கத்தில் உருவாகியுள்ளவை தான் Jagat Multiverse தொடரின் புதியப் படங்களான Macai மற்றும் Blues.

Jagat படத்தின் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இவ்விரு படங்களும், நவம்பர் 7-ஆம் தேதி LFS PJ State Cinema திரையரங்கில் ஊடக முன்னோட்ட நிகழ்வில் வெளியிடப்பட்டன.

150-க்கும் மேற்பட்ட ஊடகத்தினர், விமர்சகர்கள், நடிகர்கள் மற்றும் இரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Macai திரைப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதியும் Blues டிசம்பர் 4-ஆம் தேதியும் அடுத்தடுத்து மலேசியா முழுவதும் 47 திரையரங்குகளில் வெளியாகின்றன.

இவ்விரு படங்களும், 2015-ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற Jagat படத்தில் அறிமுகமான Appoy என்ற கதாபாத்திரத்தின் மாற்று வாழ்க்கைப் பாதைகளை விவரிக்கின்றன…

Macai-யில் குற்றவாளி வாழ்க்கை, Blues-சில் கலைஞனாக வளரும் பயணம் என சமூக சிக்கல்கள், இந்தியர் வாழ்க்கை, மற்றும் நெஞ்சை தொடும் உணர்வுகளை இயக்குநர் Sun J Perumal இந்த படங்களில் பிரதிபலிக்கச் செய்துள்ளார்.

Macai படத்தில் நடித்துள்ள Irfan Zaini, Blues-சில் முக்கிய பாத்திரமேற்றுள்ள Karnan Kanapathy இருவரும், தங்கள் கதாபாத்திரங்களை உணர்வோடு நம் கண்முன்னே கொண்டு வருகின்றனர்.

அவர்களின் சினிமா வாழ்க்கையில் இப்படங்கள் முக்கிய இடம் பெறும் என்றால் அது மிகையில்லை.

Jagat Multiverse நாம் கொண்டாட வேண்டிய மலேசியத் தமிழ் சினிமாவின் உணர்வுப்பூர்வமான, நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் புதிய முயற்சியாகும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!