
செப்பாங், நவ 21 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 1ஆவது முனையத்தில் , KLCC க்குச் செல்வதற்காக வங்கதேசப் பயணி ஒருவரிடம் 120 ரிங்கிட் கட்டணம் வசூலிக்க முயன்ற ஒருவர், நேற்று சாலைப் போக்குவரத்துத் துறையால் கைது செய்யப்பட்டார். KLIA, முனையம் 1 இல், மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் விளைவாக உரிமம் பெறாத வாடகை கார் சேவைகளை வழங்கிய ஆடவர் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் சாலை போக்குவரத்துத்துறை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் (Azrin Borhan ) உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தனது ஹோண்டா சிட்டியில் , வங்காளதேச ஆடவரை KLIA 1 ஆவது முனையத்திலிருந்து கோலாலம்பூர் மாநகரில் உள்ள KLCC க்கு செல்வதற்கு 120 ரிங்கிட் கட்டணத்தில் சேவையை வழங்க முயன்றபோது கைது செய்யப்பட்டதோடு அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.



