
செப்பாங், ஜன 16 – KLIA மாவட்டத்தின் புதிய போலீஸ் தலைவராக ரவி முத்துசாமி நியமிக்கப்பட்டார். 42 வயதுடைய அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு முன் ஒரு ஆண்டு 9 மாதங்களாக KLIA மாவட்ட போலீஸ் தலைவராக பணியாற்றி வந்த துணைக் கமிஷனர் அஷ்மான் ஷரியாட்டிற்கு ( Azman Shariat ) பதில் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷஸ்லி ( Shazeli Kahar ) மற்றும் KLIA மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்பு சடங்கு நடைபெற்றது.
KLIA மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல் சம்பவங்கள் குறித்த தகவல்களை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவதில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ரவி தெரிவித்தார்.
எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன் அது குறித்து போலீசிடம் ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே பதவி உயர்வு வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல, முழுப் பொறுப்புடனும் நேர்மையுடனும் தோள்கொடுக்கப்பட வேண்டிய ஒரு பெரிய நம்பிக்கை இதுவென (Shazeli ) தனதுரையில் விவரித்தார்.
KLIA வளாகம் மற்றும் முனையத்தில் பொதுப் பாதுகாப்பையும் , ஒழுங்கையும் பராமரிக்க,
KLIA மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு எம். ரவி தொடர்ந்து மேம்பாடுகளை கொண்டுவந்து பெருமையை தேடித்தருவார் என டத்தோ Shazeli தெரிவித்தார்.



