
செப்பாங், டிசம்பர் 23 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA- வில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெண் ஒருவர் தங்கி வந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், குழந்தைகள் சத்தம் போட்டதாகக் கூறி அந்த பெண் கோபமடைந்ததையும், அருகில் இருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றதையும் காண முடிந்தது. விமான நிலைய டிராலிகளில் அவரது தனிப்பட்ட பொருட்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போலீஸ் விசாரணையில், அந்த பெண் வெளிநாட்டவர் அல்ல என்றும் மலேசியாவைச் சார்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த பெண்ணை கைது செய்து, மேல்சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
KLIA நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மலேசிய காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தவறான ஊகங்களை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



