
செப்பாங், செப்டம்பர்-11 – கொலையுண்டதாக நம்பப்படும் 20 வயது இளம் பெண்ணின் அழுகிய சடலம் KLIA அருகே மீட்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி அது பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டதாக, KLIA போலீஸ் தலைவர் Azman Shari’at கூறினார்ர
உடல் அழுகிப் போய், முழுமையற்ற தலை மற்றும் வெறும் மண்டை ஓடு மட்டுமே இருந்தது.
இதை வைத்துப் பார்க்கும் போது குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு அப்பெண் இறந்திருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.
சடலத்துடன் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில் சவப்பரிசோதனையில், அப்பெண்ணின் உடலில் 4 இடங்களில் சந்தேகத்திற்குரிய காயங்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அச்சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப உறுப்பினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால் போலீசை தொடர்புக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.