Latestஉலகம்

ஜப்பானில் கரடி தாக்கியதில் மூத்த குடிமக்களில் ஐவர் காயம்

தோக்யோ, டிச 4 – ஜப்பான் முழுவதிலும் நேற்று பல இடங்களில் கரடி தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதில் மூத்த குடிமக்களில் ஐவர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டு நாட்டில் கரடி தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சின்ஹுவா ( Xinhua ) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

(Toyama ) டோயாமா நகரில், விடியற்காலையில் செய்தித்தாள்களை விநியோகித்துக் கொண்டிருந்த 70 வயதுடைய ஒரு தம்பதியினர் கரடியால் தாக்கப்பட்டதால் முகத்தில் காயத்திற்கு உள்ளாகினர்.

இவாட் ( Iwate ) வட்டாரத்தில் ஓஷு ( Oshu ) நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் , இன்று அதிகாலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய பாதையில் 60 வயதுடைய பெண் ஒருவர் கரடி தாக்குதலில் காயமடைந்தார்.

நாகானோ வட்டாரத்தில் நோசாவோன்சென் ( Nozawaosnsen) கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் பனிக்கட்டிகளை அகற்றும் போது கரடியால் தாக்கப்பட்டதில் முகம் மற்றும் கால்களில் கரடியின் நகக் கீறல்களுக்கு உள்ளானார்.

Shimane வட்டாரத்தில் மசூடா ( Masuda ) நகரில், உள்ளூர் சமூக மையத்தில் கரடி நடத்திய மற்றொரு தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க ஆடவர் முகத்தில் காயம் அடைந்தார்.

ஏப்ரல் மாதத்திலிருந்து, மனிதர்களுக்கும் கரடிகளுக்குமிடையே நடந்த மோதல்களால் ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் குறைந்தது 22 வட்டாரங்களில் கரடி தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 13 உயிர் இழப்புகள் உட்பட உட்பட மொத்தம் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!