
கோலாலம்பூர், நவ 18 – இன்று கோம்பாக் டோல் சாவடிக்கு அருகே
MRR 2 Jalan Lingkaran Tengah வில் ECRL எனப்படும் கிழக்குக் கரை ரயில் தண்டவாள வழித்தடம் திட்ட கட்டுமானம் விழுந்ததில் Suzuki Swift
காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். இச்சம்பவத்தில் 40 வயதுடைய அப்பெண் ஓட்டிச் சென்ற கார் நொறுங்கியது.
இன்று பிற்பகல் மணி 1.47 அளவில் நடந்த அந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கான நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செலயாங் தீயணையப்பு மற்றும் மீடபு குழுவைச் சேர்ந்த குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். நிகழ்விடத்தில் ECRL கட்டுமானம் விழுந்ததில் Suzuki Swift நொறுங்கிக் கிடப்பதை தீயணைப்பு படையினர் கண்டனர்.
எனினும் தீயணைப்பு மீட்பு குழுவினர் வருவதற்கு முன்னதாகவே கார் ஓட்டுநர் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்டார். . இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



