மலேசியா
NPE நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து இந்தியப் பிரஜை பலி

கோலாலம்பூர், டிசம்பர்-13, பங்சாரிலிருந்து பெட்டாலிங் ஜெயா நோக்கிச் செல்லும் NPE நெடுஞ்சாலையில் தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சொந்தமாகக் கவிழ்ந்து சாலைத் தடுப்பை மோதியதில், இந்தியப் பிரஜை மரணமடைந்தார்.
நேற்றைய அச்சம்பவத்தில், அவரின் Honda EX-5 மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் அவ்விபத்து நேர்ந்தது.
அதில் தலையில் பலத்த காயங்கள் எற்பட்டு 31 வயது அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ், அந்நபர் இந்தியக் கடப்பிதழ் வைத்திருந்ததாகவும், ஆனால் வாகனமோட்டும் உரிமம் இல்லையென்றும் கூறியது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுமாறும் போஸீஸ் கேட்டுக் கொண்டது.



