
ஈப்போ, ஆகஸ்ட்-20 – Seri Iskandar அருகே ஈப்போ – லூமூட் சாலையில் கார் மீது பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், கணவன்-மனைவி மற்றும் அவர்களின் 10 மாதக் குழந்தை உயிர் தப்பினர்.
நேற்று மாலை 6 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து தீயணைப்பு-மீட்புத் துறையினர் சம்பவ இடம் விரைந்த போது, Perodua Bezza காரின் நடுவில் மரம் சாய்ந்துகிடந்தது.
காரோட்டியான கணவரும், பின்னிருக்கையில் அவரின் மனைவியும் சிக்கிக் கொண்டிருந்தனர்.
குழந்தையை, அங்கிருந்த பொது மக்கள் ஏற்கனவே காப்பாற்றி வைத்திருந்தனர்.
பெரிய மரமென்பதால், சங்கிலி இரம்பத்தால் கிளைகளை அறுக்க வேண்டியிருந்தது.
மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்புக் கருவிகள் மூலம் இடிபாடுகளை நெம்பி 37 வயது கணவரும் 31 வயது மனைவியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், காலில் இலேசான வலி இருந்ததால் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களின் குழந்தை, அங்கிருந்த குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.