Latestமலேசியா

PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமமா? மறுஅட்டவணைக்கு விண்ணப்பிக்க கடனாளிகளுக்கு அறிவுறுத்துல் – சாம்ரி

கோலாலம்பூர், அக்டோபர்-25 – PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர், மாதாந்திர தவணைப் பணத்தை மறுஅட்டவணையிடக் கோரலாம்.

அவர்கள் உடனடியாக PTPTN-னை அணுகி பேச வேண்டுமென, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் கூறினார்.

புதிய பட்டதாரிகள் உட்பட உண்மையிலேயே நிதிப் பிரச்னையால் அவதிப்படுவோர், நியாயமற்ற முறையில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க அரசாங்கம் இந்த இரக்க அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.

அவர்களின் பணக் கஷ்டத்தை புரிந்தே, PTPTN-னை விரைந்துதொடர்புக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக சாரி சொன்னார்.

தவணைப் பணத்தை மறுஅட்டவணையிடுவதன் மூலம், தங்கள் சக்திக்கேற்ற தொகையை அவர்கள் செலுத்த வாய்ப்பேற்படும்.

இதன் மூலம் நிலுவையில் வைக்காமல் மாத தவணைப் பணத்தை அவர்கள் சீராக செலுத்தி வரலாம் என்றார் அவர்.

இவ்வேளையில், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென, 2026 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானதிலிருந்து, PTPTN கடன் வசூலிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!