Latestமலேசியா

RM100 சாரா உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் இல்லை; “Sara for all” காணொளியை நம்பி ஏமாறாதீர்கள்- நிதி அமைச்சு வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 25 – அனைவருக்கும் கருணையின் அடிப்படையில் உதவி வழங்கப்படும் (BANTUAN SARA) என்று அண்மையில் சமூக ஊடகத்தில் பரவி வரும் செய்தி போலியானது என்று நிதி அமைச்சு (MOF) அறிவித்துள்ளது.

முகநூலில் வெளியிடப்பட்ட பதிவின் அடிப்படையில் BANTUAN SARA க்கு எந்த முன் விண்ணப்பமும் தேவையில்லை என்று MOF விளக்கமளித்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 100 ரிங்கிட் உதவித்தொகை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்களின் அடையாள அட்டையின் (MyKad) அடிப்படையில் தானாகவே அவர்களுக்கு அனுப்பப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி செய்திகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற கூடாது என்றும் மோசடிக்கு ஆளாகாமல் தங்களைத் தற்காத்து கொள்ள வேண்டுமெனவும் MOF அறிவுறுத்தியுள்ளது.

மேலும் SARA உதவியை ஆகஸ்ட் 31 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மக்கள் செலவிடலாம் என்றும் இது குறித்த கூடுதல் தகவலுக்கு வாடிக்கையாளர்கள் நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ சேனல்களைப் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!