Latestமலேசியா

RM100 சாரா உதவித் திட்டம்; மிகை இலாபத்திற்கு குறி வைக்கும் வியாபாரிகளுக்கு நிதியமைச்சு எச்சரிக்கை

புத்ராஜெயா, செப்டம்பர்-8- சிறப்பு அங்கீகாரமாக சாரா எனப்படும் Sumbangan Asas Rahmah திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் 100 ரிங்கிட் உதவியானது, பொது மக்கள் அனுபவிக்க வேண்டிய நன்மைகளாகும்.

அதனைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும் அரசாங்கம் சமரசம் செய்யாது என, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் (Amir Hamzah Azizan) கூறினார்.

ஒரு சில வியாபாரிகள் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான சமூக ஊடகப் பதிவுகளை அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அப்புகார்களை மடானி அரசாங்கம் நிச்சயம் விசாரிக்கும். தவறுகள் உறுதியானால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது விலைக் கட்டுப்பாடு மற்றும் மிகை இலாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

அதே சமயம், அரசாங்க உதவி பெறுபவர்களுக்கு சிறப்பு விலைகளை வழங்கும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளின் செயல்களையும் அரசாங்கம் பாராட்டுவதாக அமீர் ஹம்சா கூறினார்.

அநியாய விலை குறித்த புகார்களை KPDN அமைச்சின் e-Aduan அகப்பக்கம், 019-848 8000 என்ற வாட்சப் எண் அல்லது 1-800-886-800 என்ற தொலைப்பேசி அழைப்புச் சேவையை பொது மக்கள் நாடலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!