புத்ராஜெயா, செப்டம்பர்-27 – செப்டம்பர் மாதத்துக்கான 700 ரிங்கிட் MyKad நிதியுதவியின் மூன்றாம் கட்ட விநியோகம் என்ற பெயரில் டிக் டோக்கில் பரவியுள்ள தகவலில் உண்மையில்லை.
தேசியப் பதிவுத் துறையான JPN அதனை உறுதிப்படுத்தியது.
JPN எந்த காலத்திலும் எந்தவொரு ரொக்க உதவியும் வழங்கியதில்லை.
ஆகவே, டிக் டோக்கில் பரவும் அந்த பொய்ச் செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்.
தெரியாத link இணைப்புகளைத் தட்டி மோசம் போக வேண்டாமென JPN கேட்டுக் கொண்டது.
அரசாங்கம் வழங்கும் நிதியுதவிகள் குறித்த தகவல்களை, பொதுமக்கள் bantuantunai.hasil.gov.my என்ற இணைய அகப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் அத்துறை கூறியது.