
கோலாலம்பூர், மே-16 – கோலாலம்பூர், பங்சார் அருகே SPE எனப்படும் செத்தியாவங்சா – பந்தாய் நெடுஞ்சாலையிலிருந்து பெண்ணொருவர் குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 7.22 மணியளவில் அது குறித்து MERS 999 அவசர எண்களுக்கு அழைத்து, தீயணைப்புத் துறைக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.
21 வீரர்களுடன் சம்பவ இடம் விரைந்த கோலாலாம்பூர் தீயணைப்புப் படை, நெடுஞ்சாலை கம்பத்தின் மேல் 35 வயது பெண் மன அழுத்தத்தில் இருந்ததைக் கண்டது.
எனினும் விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை அவர்கள் காப்பாற்றி, மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைத்தனர்.
சிகிச்சைக்காக அப்பெண் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.