
தைப்பிங், ஏப்ரல்- 30 – பேராக், தைப்பிங், புக்கிட் லாருட் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஓர் ஆடவர், மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இன்று காலை 10.40 மணிக்கு தகவல் கிடைத்து, தைப்பிங் – கமுந்திங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
அவர்கள் சென்று சேருவதற்குள், அந்த மலையேறும் குழுவிலிருந்த மருத்துவக்குழு அவ்வாடவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தது.
எனினும் சிகிச்சைப் பலனளிக்காது 50 வயது Ahmad Saharim Saudi மரணமடைந்தார்.
KKM குழுவின் துணையுடன் சடலம் கீழே கொண்டு வரப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.