
கோத்தா கினாபாலு, டிசம்பர் 19-கோத்தா கினாபாலுவில் உள்ள UMS எனப்படும் மலேசிய சபா பல்கலைக்கழக வேந்தர் மண்டபத்தில், ஆண் மாணவர் ஒருவர் நேற்று இறந்துகிடந்தார்.
உயரத்திலிருந்து விழுந்ததாக நம்பப்படும் 23 வயது அம்மாணவரின் சடலத்தை, நேற்று காலை 10 மணியளவில் 2 பராமரிப்புப் பணியாளர்கள் கண்டெடுத்து தகவல் கொடுத்தனர்.
மண்டப CCTV கேமராக்களைப் பரிசோதித்ததில், அம்மாணவர் புதன்கிழமை மாலை 6 மணியளவில் விழுந்தது கண்டறியப்பட்டதாக, மாவட்ட போலீஸ் கூறியது.
கீழே விழுந்ததால் ஏற்பட்ட பலத்த காயங்களைத் தவிர, அவரது உடலில் சந்தேகப்படும்படியான வேறெந்த காயங்களும் இல்லை.
எனவே, தற்போதைக்கு இது ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
UMS நிர்வாகம் மாணவனின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொண்தோடு, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் உறுதியளித்தது.



