
உலு சிலாங்கூர், நவ 7 – முதல் படிவ மாணவன் ஒருவன் காரில் மோதி மரணம் அடைந்தது தொடர்பில் அக்காரை ஓட்டிச் சென்ற 65 வயது ஆடவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். உலுசிலாங்கூர், கம்போங் கெசிர் தெங்காவில் ( Kampung Gesir Tengah ) பள்ளிக்கு செல்வதற்காக சாலையை கடந்தபோது மோதப்பட்டதால் 13 வயதுடைய அந்த மாணவன் இறந்ததாக உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அகமட் பைசால் தாரிம் ( Ahmad Faizal Tahrim ) உறுதிப்படுத்தினார்.
அந்த ஆடவர் விசாரணைக்கு உதவியாக தற்காலிகமாக கைது செய்யப்பட்டபோதிலும் அவர் தடுத்து வைக்கப்படவில்லை. இந்த விபத்து தொடர்பில் காலை மணி 7.40 அளவில் போலீஸ் புகார் பெற்றதாகவும் அகமட் பைசால் கூறினார். Gedangsa, Kampung Rahmat ட்டை சேர்ந்த ஆடவர் தஞ்சோங் மாலிமை நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றபோது அந்த மாணவனை மோதியதாக கூறப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த ஆடவருக்கு சொந்தமான டொயாத்தா வியோஸ் கார் மேல் நடவடிக்கைக்காக உலு சிலாங்கூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.