Latestஉலகம்

இத்தாலி Alps மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான பண்டைய டைனசோர் பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு

ரோம், டிசம்பர் 17-இத்தாலியின் Alps மலைப்பகுதியில், ஆயிரக்கணக்கான பண்டைய டைனசோர் பாதச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மிகவும் அபூர்வமான இந்த புதைபடிவங்கள், Stelvio தேசிய பூங்காவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,800 மீட்டர் உயரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது இதுவரை கண்டறியப்பட்டவற்றிலேயே அதிக உயரத்தில் உள்ள டைனசோர் தடயங்களாகும்.

இந்த பாதச்சுவடுகள் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அதாவது Alps மலை உருவாவதற்கு முன்பே Jurassic காலத்தைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்காலத்தில், இப்பகுதி மலைப்பகுதியாக இல்லாமல், தாழ்வான, வெப்பமண்டல நிலப்பரப்பாக இருந்துள்ளது.

பல வகை டைனசோசர்களின் தடயங்கள் இருப்பதால், இப்பகுதி ஒரு காலத்தில் டைனசோசர்கள் அதிகம் நடமாடிய பாதையாக இருந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு, டைனசோசர்களின் வாழ்வியல், நகர்வு மற்றும் பண்டைய கால காலநிலை குறித்து புதிய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!