Latestஉலகம்

போர் நிறுத்தமோ இல்லையோ, பயங்கரவாதிகளை நாம் விடக் கூடாது; முக்கிய முஸ்லீம் தலைவர் அசாதுதீன் திட்டவட்டம்

ஹைதராபாத், மே-12 – தனது நிலத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி என்பதே கிடையாது.

எனவே, போர் நிறுத்தம் அமுலில் உள்ளதோ இல்லையோ, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்தியா விடக்கூடாது என, அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி (Asaduddim Owaisi) கூறியுள்ளார்.

அவர்களை அழித்தால் தான் 26 பேரை பலிகொண்ட ஜம்மு – காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டுக்கு நீதி கிடைக்கும் என்றார் அவர்.

வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்துக்கும் நான் ஆதரவாக இருந்து வந்துள்ளேன்; இனியும் அது தொடருமென, செல்வாக்குமிக்க முஸ்லீம் தலைவர்களில் ஒருவரான ஒவைசி கூறினார்.

இந்தியா ஒன்றுபட்டால் நாம் எத்தனை வலிமையானவர்கள் என்பதையும், நமக்குள்ளேயே அடித்துக் கொண்டால் எதிரிகள் தான் பயனடைவர் என்பதையும், இந்த 2 வாரங்களில் நடந்தவை மூலம் மக்களும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்வார்கள் என தாம் நம்புவதாக ஒவைசி சொன்னார்.

பாகிஸ்தான் தனது தவறான புரிதல்களை நியாயப்படுத்த குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்துகிறது.

பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஓர் இஸ்லாமியப் போரை நடத்தி வருகிறது; ஆனால், இந்தியாவில் மட்டுமே 20 கோடி முஸ்லீம்கள் வாழ்வதை அது மறந்து விட்டது.

எனவே, உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நாட்டை இந்தியா எதிர்த்து நிற்க வேண்டும்.

அதற்கு இன – மன பேதமின்றி அனைத்து இந்தியர்களும் மோடியின் பின்னால் நிற்க வேண்டும் என ஒவைசி பேசியிருப்பது வைரலாகி வருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!