Latestமலேசியா

2023 SPM தேர்வு ; 395,870 மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர்

புத்ராஜெயா, ஜனவரி 1- நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில், 2023ஆம் ஆண்டுக்கான SPM தேர்வை எதிர்கொள்ள, மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 870 மாணவர்கள் பதிவுச் செய்துக் கொண்டுள்ளனர்.

தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய, ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 635 கண்காணிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

தேர்வுக்கு அமரவுள்ள மாணவர்கள், தேதி, நேரம், குறியீடு உட்பட மேல் விவரங்களை தெரிந்து கொள்ள, தேர்வு அட்டவணையை சரிபார்த்துக் கொள்ளுமாறு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Ip.more.gov.my எனும் இணைய அகப்பக்கம் வாயிலாக, மாணவர்கள் தங்கள் தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

அதே சமயம், தேர்வெழுத செல்லும் மாணவர்கள், மறக்காமல் தங்கள் அடையாள அட்டையையும், தேர்வு பதிவு அறிக்கையையும் உடன் கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

SPM மாணவர்களுக்கான அறிவியல் நடைமுறைத் தேர்வுகள் டிசம்பர் ஐந்தாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரையில் நடைபெற்ற வேளை ; மலாய் மற்றும் ஆங்கில வாய்மொழித் தேர்வுகளும், செவிதிறன் தேர்வுகளும் முறையே இம்மாதம் எட்டாம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரையிலும், அதன் பின்னர் 17-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். எழுத்துப்பூர்வ தேர்வுகள் இம்மாதம் 30-ஆம் தேதி தொடங்கி மார்ச் ஏழாம் தேதி நிறைவடையும்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!