Latestஉலகம்

ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது; நெதன்யாகு ஆணவம்

டெல் அவிவ், ஜனவரி 15 – பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில், நெதர்லாந்து, ஹேக்கிலுள்ள, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படாலும், தாம் ஒரு போதும் பயப்படபோவதில்லை என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

மாறாக, காசா முனையில், ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

ICJ சர்வதேச நீதிமன்றம் உட்பட யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. அந்த வெற்றி சாத்தியமானது. வெற்றி கிட்டும் வரை தாக்குதல் தொடரும். அதனை நாங்கள் செய்து முடிப்போம்” என, நேற்றுடன் நூறாவது நாளை எட்டிய காசா போர் மீதான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு நெதன்யாகு சொன்னார்.

1948-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை உடன்படிக்கையை இஸ்ரேல் மீறி விட்டதாக கூறி, ICJ சர்வதேச நீதிமன்றத்தில், அந்நாட்டிற்கு எதிராக, தென் ஆப்பிரிக்கா தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை சுட்டிக்காட்டி நெதன்யாகு அவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை முதல் முறையாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையின் போது, இஸ்ரேலின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளின் பட்டியலை தென் ஆப்பிரிக்கா முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!