Latestமலேசியா

குழந்தைக்குக் கலக்கிய பாலில் தவறுதலாக ஷாபு போதை பானத்தைக் கலந்த தாய்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 26 – சிலாங்கூரில் போதைப் பொருள் உட்கொண்ட மயக்கத்தில் பிள்ளைக்கு பால் கலக்கிய தாய், தவறுதலாக அதில் ஷாபு போதை பானத்தைக் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்டாலிங் ஜெயா,  Taman Medaனில் பிப்ரவரி 20-ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது.

பிள்ளையைக் பார்த்துக் கொள்ளுமாறு Seri Kembangan-னில் உள்ள பாட்டி வீட்டில் பெற்றோர் கொண்டு வந்து விட்டுச் சென்றதில் இருந்து 16 மாத அக்குழந்தை விடாது அழுதுக் கொண்டே இருந்திருக்கிறது.

அதோடு, வழக்கத்திற்கு மாறாக அதிகச் சுட்டித்தனத்தோடு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதன் நடவடிக்கையும் இருந்துள்ளது.

குழந்தையின் நடவடிக்கையில் அப்படி அதீத மாற்றம்  தெரிவதை உணர்ந்த 

பாட்டி சந்தேகத்தில் பெற்றோரை அதட்டிக் கேட்ட போது தான் குட்டு அம்பலமானது.

கணவரின் ஹாபு போதை பானத்தைக்கவனிக்காமல்பிள்ளைக்காகக் கலக்கிய பாலில் ஊற்றி விட்டுகமுக்கமாகஇருந்ததை 34 வயது தாய் ஒப்புக் கொண்டார்.

பின்னர் உடனடியாக குழந்தையை மருத்துவனையில் சேர்த்தது விசாரணையில் தெரிய வந்தது.

காஜாங் மருத்துவனையில் இருந்து புகார் கிடைத்து, 

தாயையும் 40 வயது தந்தையையும் விசாரணைக்காக அன்றைய நாளே போலீஸ் கைதுச் செய்து கொண்டுச் சென்றதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Shahrulnizam Jaa’far  சொன்னார்.

சிறுநீர் பரிசோதனையில் இருவருமே போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த ஆடவர் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தை தற்போது பாட்டியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பெற்றோர், 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!