Latestமலேசியா

முகநுலில் மோசமான தகவல் தொடர்பை பதிவிட்ட அடலின் சாங்கிற்கு ரி.ம 7,000 அபராதம்

கோலாலம்பூர், அக் 24 – சமூக ஊடகங்கள் வழியாக ஐந்து வயது சிறுவன் சம்பந்தப்பட்ட மோசமான தகவல் தொடர்புகளை பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து முகநூல் உரிமையாளரான அடலின் சாங்கிற்கு (Adeline Chang) செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் RM7,000 அபராதம் விதித்தது. நீதிபதி அகமட் புவாட் ஒத்மான் ( Ahmad Fuad Othman ) முன்னிலையில் 24 வயதுடைய சாங் பெங் யி (Chang Pei Yi) எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை ஒப்புக் கொண்டார்.

மே 30ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில், மற்றவரை புண்படுத்தும் நோக்கத்துடன் அசிங்கமான வார்த்தைகளைக் கொண்ட மாண்டரின் படங்கள் மற்றும் உரைகள் போன்ற தகவல்தொடர்புகளை அந்த பெண் தெரிந்தே அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த பதிவேற்றம் ஜூன் 1ஆம் தேதி காலை 8 மணியளவில் சைபர்ஜெயா, ஜாலான் Impact ட்டிலுள்ள MCMC டவர் 1இல் கண்காணிக்கப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 50,000 ரிங்கிட் மேற்போகாமல் அபராதம் மற்றும் ஒரு ஆண்டுக்கு மேற்போகாத சிறை அல்லது இவ்விரண்டு விதிக்கப்படும் 1998 ஆம் ஆண்டின் தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதி உட்பிரிவு (1) (a) கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நீதிபதி அகமட் புவாட் அவருக்கு அபராதம் விதித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!