
கோலாலம்பூர், ஜூலை-7 – ம.இ.காவுக்கு தங்களை அர்ப்பணித்த மூத்த மகளிர் தலைவிகளைக் கொண்டாடும் வகையில், நேற்று ம.இ.கா தலைமையகத்தில் முதலாவது ஒன்றுகூடல் (reunion) நிகழ்ச்சி நடைபெற்றது.
ம.இ.கா மகளிர் முன்னாள் சேவையாளர்கள் செயற்குழு அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சிறப்பு வருகைப் புரிந்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
அவர் தமதுரையில், மூத்த மகளிர் தலைவிகளின் கட்சிப் பணிகளைப் பாராட்டியதோடு, அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு புகழாரம் சூட்டினார்.
ஏற்பாட்டுக் குழுவுக்கு 15,000 ரிங்கிட் மானியத்தையும் அவர் வழங்கினார்.
மூத்த மகளிர் தலைவிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
பினாங்கு, கெடா முதல் மலாக்கா, ஜோகூர் வரை திரளான மூத்த மகளிர் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது, அவர்களின் வலுவான ஒற்றுமையை நிரூபித்தது.