Latestமலேசியா

தாமான் ஸ்ரீ கோம்பாக் ஹைட்ஸ் பகுதியில் வீட்டு கூரையின் மீது அசந்து தூங்கிய ‘Harimau Dahan’; அதிர்ச்சியில் வீட்டின் குடியிருப்பாளர்

கோலாலம்பூர், செப்டம்பர் 10 – கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூர், தாமான் ஸ்ரீ கோம்பாக் ஹைட்ஸ் பகுதியிலுள்ள வீட்டின் கூரையின் மீது Harimau Dahan இனத்தைச் சார்ந்த புலி ஒன்று படுத்திருந்ததை கண்ட வீட்டின் உரிமையாளர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவசர அழைப்பு கிடைத்தவுடனேயே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணி வேலைகளைத் தொடங்கினர் என்று கோலாலம்பூர் மலேசிய பாதுகாப்புப் படையினர் (APM) அறிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அப்புலியை மீட்பு பணியாளர்கள் பாதுகாப்பாகப் பிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என்றும் அறியப்படுகின்றது.

தென்கிழக்காசியாவின் மழைக்காடுகளில் வாழும் நடுத்தர அளவிலான காட்டு பூனை இனத்தைச் சார்ந்த இந்த விலங்கு மரங்களில் ஏறும் வல்லமைப் பெற்றுள்ளதோடு அதன் உடலில் மேகம் போன்ற வண்ணத் தழுவல்கள் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விலங்கின் வாழ்விடம் அழியும் அபாயத்தில் இருப்பதால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த புலி கூட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய இனப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!