
வாஷிங்டன், ஆக 13 – குற்றங்களைத் தடுத்து அமெரிக்கத் தலைநகரை வீடற்ற முகாம்களிலிருந்து விடுவிக்கும் அதிபர் Donald Trump முயற்சிகளுக்கு இணங்காவிட்டால், Washingtonனில் வீடற்ற மக்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வீடற்ற நபர்கள் தங்கள் முகாமை விட்டு வெளியேறவும், வீடற்ற தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லவும், போதைப்பொருள் அல்லது மனநல சேவைகளை வழங்கவும் விருப்பம் வழங்கப்படும்.
மேலும் அவர்கள் மறுத்தால், அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt ) செய்தியாளர்களிடம் கூறினார்.
வீடற்ற நபர்களை Washingtonனிலிருந்து வெகு தொலைவில் இடமாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை Trump நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து அமெரிக்க பூங்கா போலீஸ்துறை கூட்டரசு பூங்காக்களில் இருந்து 70 வீடற்ற முகாம்களை அகற்றியுள்ளதாகவும், இந்த வார இறுதியில் நகரத்தில் மீதமுள்ள இரண்டு முகாம்களை அகற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இனிடையே தனது குழு மக்களை எச்சரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு , இன்னும் நிறைய குழப்பங்கள் இருப்பதாக வீடட்டவர்களுக்கு சேவைகளை வழங்கும் Miriam’s Kitchen என்ற அமைப்பின் கொள்கை இயக்குநர் Andy Wassenich தெரிவித்திருக்கிறார்.