
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – மெக்னம் நிறுவனம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதியப் பந்தயச் சீட்டுகளை அறிமுகப்படுத்திய சில தினங்களிலேயே, அது வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்துள்ளது.
ஜூலை 13-ஆம் தேதி நடந்த குலுக்கலில் Magnum Life விளையாட்டின் முதல் பரிசான நாளொன்றுக்கு 1,000 ரிங்கிட் வீதம் 20 வருடங்களுக்கு மொத்தமாக 7.3 மில்லியன் ரிங்கிட்டை, பண்டார் பாரு கம்பாரைச் சேர்ந்த வாடிக்கையாளர் தட்டிச் சென்றார்.
புதிதாக வடிவமைக்கப்பட்ட பந்தயச் சீட்டுகள் கவனத்தை ஈர்த்ததை அடுத்து, தனது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க எண்ணி Magnum Life பந்தயச் சீட்டை அவர் 1 வெள்ளிக்கு வாங்கியுள்ளார். அவர் பந்தயம் கட்டியது 03, 06, 08, 09, 18, 20, 29, 31 ஆகிய எண்களாகும்.
அவை கூட அப்போது அவருக்குத் தோன்றிய எண்கள் தானாம்; இந்நிலையில் அன்றிரவு குலுக்கல் முடிவில் தனக்கு பரிசு விழுந்துள்ளதைப் பார்த்து தாம் திக்குமுக்காடிப் போனதாக அவர் சொன்னார். Magnum Life தொடங்கியதிலிருந்து முதல் பரிசை வென்றுள்ள 17-ஆவது நபர் இவராவார்.